ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘தர்பார்’. இதில் பிரதிக் பாப்பர், சுனில் ஷெட்டி, தம்பி ராமையா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பு பணிகளை கவனித்து வருகிறார்.
'தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் 'சும்மா கிழி கிழிதான்'... - Darbar Rajinikanth
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் தற்போது வெளியாகியுள்ளது.
darbar
2020 பொங்கல் பண்டிகையையொட்டி இத்திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு ரஜினி டப்பிங் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
தற்போது தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது. நெருப்புப் பேரோட நீ குடுத்த ஸ்டாரோட என தொடங்கும் பாடல் எஸ்பிபி வாய்ஸில் வெளியாகியுள்ளது. பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் இதனைய வைரலாக்கி வருகின்றனர்.