‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. அதைத் தொடர்ந்து அரவிந்த் சாமி, ஸ்ரேயா உள்ளிட்டோரை முன்னணி கதாபாத்திரங்களாக வைத்து ‘நரகாசூரன்’ என்ற படத்தை இயக்கினார்.
'மாஃபியா’ டீசர் பார்த்து அசந்துபோன ரஜினி - மாஃபியா
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள ‘மாஃபியா’ படத்தின் டீசரை பார்த்த ரஜினி, அவரை நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார்.
அந்தத் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. கார்த்திக் நரேனின் மூன்றாவது திரைப்படமாக உருவாகியுள்ளது ‘மாஃபியா’. அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் டீசரை பார்த்து அசந்துபோன ரஜினிகாந்த், கார்த்திக் நரேனை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து கார்த்திக் நரேன், அற்புதமான வேலை கண்ணா, செமயா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு (Brilliant work kanna. Semaya irukku. Loved it) என ரஜினி கூறியதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.