தமிழ் திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் வலம் வந்தவர் கே.வி. ஆனந்த். இவர் இன்று (ஏப்ரல் 30) அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகினர் மத்தியுலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கே.வி. ஆனந்தின் ஆத்மா சாந்தியடையட்டும் - ரஜினிகாந்த் இரங்கல் - கே.வி. ஆனந்த் மறைவு
மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்தின் ஆத்மா சாந்தியடையட்டும் என ரஜினிகாந்த் ட்விட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கே.வி. ஆனந்தின் மறைவுக்கு ட்விட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்" என பதிவிட்டுள்ளார். ரஜினியின் 'சிவாஜி' படத்தில் கே.வி.ஆன்ந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.