புற்றுநோய் காரணமாக பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் நேற்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்.30) அவர் உயிரிழந்தார்.
ரிஷி கபூர் மறைவு: இதயம் உடைந்த ரஜினி! - ரிஷிகபூர் ரஜினி
நடிகர் ரிஷி கபூரின் மறைவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Rishi kapoor
இவரின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவு குறித்து பிரபலங்கள் தங்களது சமூகவலைதளத்தில் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரிஷி கபூரின் மறைவு குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது நண்பர் ரிஷி கபூரின் மறைவால் எனது இதயம் உடைந்துவிட்டது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.