எல்கேஜி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கோமாளி படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இவர் நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் பெரும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில் சென்னை பிரசாத் லேபில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் எப்போது வரும் என நினைத்து கொண்டிருக்கிறோம் ஆனால் வழக்கு செல்வதை பார்த்தால் அது நடக்காது போலும். விஷால் வருமான வரி வழக்கிலிருந்து வெளியே வரவேண்டும்.
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்' - 'கோமாளி' பட தயாரிப்பாளர் - செய்தியாளர் சந்திப்பு
'ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் 'கோமாளி' பட டிரைலரில் அந்த காட்சி வைக்கப்பட்டது எனக்கூறி வலைதளத்தில் பரவும் சர்ச்சைகளுக்கு தயாரிப்பாளர்ஐசரி கணேஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
isari ganesh
மேலும் கோமாளி பட டிரைலரில் ரஜினியை கிண்டல் செய்வதுபோல் உள்ள காட்சிகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். நான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகன். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என எண்ணி தான் காட்சி வைக்கப்பட்டுள்ளது என்றார்.