சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71ஆவது பிறந்தநாளை நேற்று (டிசம்பர் 12) கொண்டாடினார். இதனையொட்டி ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குறிப்பாகப் பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசன், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின்றன.
அதில் லதா ரஜினிகாந்த், செளந்தர்யா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ், ரஜினி சகோதரர் சத்யநாராயணா, பேரன்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய ரஜினிகாந்த்
இதையும் படிங்க:மேடையில் கமல் ஹாசனிடம் வாய்ப்பு கேட்ட பிரபலம்