'தர்பார்' திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'அண்ணாத்த'. மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, சதீஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். 'அண்ணாத்த' படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மீண்டும் தொடங்குகிறதா அண்ணாத்த படப்பிடிப்பு? - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்
சென்னை: 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன்பு நடிகை கீர்த்தி சுரேஷ் சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு விமானம் மூலம் வந்த புகைப்படங்கள் வெளியானதால், படப்பிடிப்பு தொடங்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் ரஜினிகாந்த் கலந்துகொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சிறுத்தை சிவா இயக்கி வரும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக பொங்கல் விடுமுறைக்கு ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.