தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

யாத்தே...'அண்ணாத்த' முதல்நாள் வசூல் இவ்வளவா..? - அண்ணாத்த பாக்ஸ் ஆபீஸ் வசூல்

ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 'அண்ணாத்த' படத்தின் முதல்நாளில் தமிழ்நாட்டில் ரூ.34.92 கோடி வசூல் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Annaatthe
Annaatthe

By

Published : Nov 5, 2021, 7:01 PM IST

ரஜினி நடிப்பில், தீபாவளியை முன்னிட்டு நேற்று (நவம்பர் 4) திரையரங்கில் வெளியான படம் 'அண்ணாத்த'. 'சிறுத்தை' சிவா இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.

அடேங்கப்பா முதல் நாள் வசூல் இவ்வளவா?

'அண்ணாத்த' ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. இந்நிலையில், 'அண்ணாத்த' படத்தின் முதல் நாள் வசூல் குறித்தான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, தமிழ்நாட்டில் - ரூ.34.92 கோடியும்; ஆந்திரா, தெலங்கானாவில் ரூ.3.06 கோடியும்; கர்நாடகாவில் ரூ. 4.31 கோடியும்; கேரளாவில் ரூ.1.09 கோடியும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் ரூ.1.54 கோடியும் வெளிநாடுகளில் ரூ. 25.27 கோடியும் என மொத்தம் ரூ. 70.19 கோடி வசூல் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: இறுக்கி அணைத்து உம்மா கொடுத்த ரஜினி - இயக்குநர் சிவா நெகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details