தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சமூக வலைதளத்தில் வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் 145 படத்தின் போஸ்டர் வீடியோ! - ரஜினிகாந்தின் பட போஸ்டர் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அபூர்வராகங்கள்' படத்தின் போஸ்டர் தொடங்கி 'பேட்ட' படத்தின் போஸ்டர் வரை 145 திரைப்பட போஸ்டர்கள் வைத்து முப்பது செகண்ட் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினி
ரஜினி

By

Published : Aug 11, 2020, 8:58 PM IST

தமிழ் சினிமாவில், கடந்த 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அந்த வகையில், வரும் 18ஆம் தேதியுடன் ரஜினி திரைத்துறைக்கு வந்து 45 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனைக் கொண்டாடும் வகையில், தற்போது சமூக வலைதளத்தில் #45YearsOfRajinism என்கிற ஹேஷ்டேக்கில் காமன் டிபி உருவாக்கப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, 'அபூர்வ ராகங்கள்' திரைப்பட போஸ்டர் தொடங்கி 'பேட்ட' பட போஸ்டர் வரை 145 பட போஸ்டர்களை வைத்து முப்பது செகண்ட் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details