இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தர்பார்'. இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துவருகிறார். மேலும் இவர்களுடன் நிவேதா தாமஸ், யோகி பாபு, ஜான் மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
மீண்டும் வெளியான 'தர்பார்' ஸ்டில்... ஆனா இது கொஞ்சம் வித்தியாசம்..! - நயன்தாரா
நடிகர் ரஜினிகாந்த் 'தர்பார்' படப்பிடிப்பின் இடைவேளையின்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகிவருகிறது.
இப்படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அவ்வப்போது இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படம், வீடியோ வெளியாகி ரசிகர்களை பரவசப்படுத்திவருகிறது.
இந்நிலையில், ரஜினி தனது மகள் சவுந்தர்யாவின் மகனான வேத்துடன் இருக்கும் புகைப்படத்தை சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் குஷியாகி இணையதளத்தில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் குடும்பத்தினர் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.