தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரஜினி மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு - அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? - ரஜினிக்கு அறுவை சிகிச்சை

நடிகர் ரஜினிகாந்தின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பு சரி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rajini
rajini

By

Published : Oct 29, 2021, 5:57 PM IST

சென்னை:நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (அக்.28) அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டனர். இந்தப் பரிசோதனையில், ரஜினிகாந்துக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக ரத்த குழாய்களில் படியும் கொழுப்பை கரைக்கும் ஆற்றலை உடல் இழக்கும்போது நெக்ரோசிஸ் (necrosis) எனப்படும் இந்த பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரி செய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுப்பட்டுள்ளதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப் படுகிறது.

இந்நிலையில், ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து இன்னும் சில நாள்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ரஜினிக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிகிச்சை குறித்த விவரங்களை மருத்துவர்கள் கூறுகையில், நடிகர் ரஜினிகாந்தின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பு தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.

மூளைக்கு செல்லும் தமனி ரத்தக்குழாயில் ரத்த ஓட்டம் குறைதல் மற்றும் தடைபடும்போது, பிராண வாயு, ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது தடைபட்டு, மூளையின் சில பாகங்கள் செயல் இழந்து, உடலின் சில பாகங்களும் செயல் இழக்கத் தொடங்கும்.

அதனால் பக்கவாதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனை முன்கூட்டியே அறிந்து சிகிச்சை அளித்தால் பக்கவாதம் நோய் வராமல் தடுக்கலாம்.

இருதயத்தில் இருந்து மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் தமனி ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால், சில அறிகுறிகள் தோன்றும். அதன் பின்னர் டாப்ளர் ஸ்கேன் மூலம் தமனியில் ரத்த அடைப்பு ஏற்பட்டுள்ளதை பரிசோதனை மூலம் கண்டறிய முடியும்.

அதில் அடைப்பு 50 விழுக்காடு வரை இருந்தால், மருந்து மாத்திரை கொடுத்து சரிசெய்யலாம். 60 விழுக்காட்டிற்கு மேல் இருந்தால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

இதய ரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த ரத்த துகள் மூளைக்கு சென்றால் பாதிப்பு அதிகமாகும். எனவே ரத்த அடைப்பை சரி செய்ய ஸ்டென்ட் பொருத்தப்பட்டவுடன் ரத்த நாளத்தில் அடைப்பு நீக்கப்படுகிறது. வலைடியூப் வழியாக ரத்தம் சீராக பாய்கிறது.

பக்கவாதத்தையும் தடுக்கும் வலது இடது கழுத்தில் கரோடைட் என்ற ரத்தக்குழாய்கள் உள்ளன. இதயத்தில் இருந்து செலுத்தப்படும் ரத்தம் இந்த ரத்தநாளங்கள் வழியாகத்தான் மூளைக்கு செல்கின்றன.

இதிலும் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த சிகிச்சை முறைக்கு Transcarotid Artery Revascularization (TCAR) என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ’ரஜினிகாந்த் சில நாள்களில் வீடு திரும்புவார்’ - காவேரி மருத்துவமனை அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details