சென்னை:நடிகர் ரஜினிகாந்த் அக்டோபர் 28ஆம் தேதி மாலை லேசான மயக்க நிலையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். வழக்கமான பரிசோதனைக்காக ரஜினி அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, ரத்த நாளத்தில் கொழுப்பு அடைப்பை நீக்குவதற்கான ரத்தநாள மறுசுழற்சி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது. அந்த அறிக்கையில் அடுத்த சில நாள்கள் ஓய்வுக்குப் பின்னர் ரஜினி வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வீடு திரும்பினார்
தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் 1ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், நேற்றிரவே (அக். 31) அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில், ரஜினியின் மகள் சௌந்தர்யா புதிதாக தொடங்கியுள்ள 'ஹூட்' என்னும் குரல் சார்ந்த சமூக வலைதள செயலியில் ரஜினிகாந்த் குரல் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.