சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா, மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இமான் இசை அமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா ஊரடங்கால் தடைபட்டு, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கான டப்பிங் பணிகளை ரஜினிகாந்த் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் 'அண்ணாத்த' படத்தில் தனது காட்சிக்கான டப்பிங் பணியில் ரஜினி ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனியார் ஸ்டூடியோவில் டப்பிங் பணிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
'அண்ணாத்த' திரைப்படம், வரும் தீபாவளி வெளியீடாகத் திரையரங்கில், நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அண்ணாத்த' ரஜினியுடன் இயக்குநர் சிவா!