தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சென்னை திரும்பிய ரஜினி - உற்சாகமுடன் வரவேற்ற ரசிகர்கள் - அண்ணாத்த

சென்னை: மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த ரஜினி காந்த் இன்று (ஜூலை.9) அதிகாலை சென்னை திரும்பினார்.

rajini
rajini

By

Published : Jul 9, 2021, 9:27 AM IST

சிறுநீரக பாதிப்பு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ரஜினி அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்.

கரோனா பரவல் அச்சுறுத்தலால் இந்தாண்டு தாமதமாக ஜூன் 19ஆம் தேதி ரஜினி தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அங்கு ரசிகர்கர் சிலரையும் அவர் சந்தித்தார்.

இந்நிலையில், பரிசோதனை முடிவடைந்தையடுத்து அமெரிக்காவிலிருந்து இன்று (ஜூலை.9) அதிகாலை ரஜினி சென்னை திரும்பினார். விமானநிலையத்தில் அவரை ரசிகர்கள் ஆரவாரத்துடனும் உற்சாகத்துடனும் வரவேற்றனர்.

சென்னை திரும்பிய ரஜினி

அப்போது ரசிகர்கள் சிலர் உடல்நிலைகுறித்து கேட்ட போது, நலமாக இருப்பதாக ரஜினி கூறினார். அதன்பின் காரில் ஏறி இல்லத்திற்கு சென்றார். சில நாட்கள் ஓய்வுக்கு பின் ரஜினி 'அண்ணாத்த' படத்தின் டப்பிங் பணிகளில் கலந்துகொள்வார் என தெரிகிறது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் ரசிகர்களைச் சந்தித்த 'அண்ணாத்த' ரஜினி!

ABOUT THE AUTHOR

...view details