நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'அண்ணாத்த'. நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.
தொடர்ந்து படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ஹைதராபாத்தில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய ரஜினி ஓய்வில் இருந்து வந்தார்.
முன்னதாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், ஆண்டுக்கு ஒருமுறை அமெரிக்கா சென்று மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டு வருகிறார். அதன்படி கடந்த மாதம் ஜூன் 19ஆம் தேதி மத்திய அரசின் அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா சென்ற அவர், மூன்று வாரங்கள் கழித்து நாளை (ஜூலை.09) காலை சென்னை திரும்புகிறார்.