மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கர்ணன் படம் பார்த்து பாராட்டிய ரஜினி! - ரஜினி லேட்டஸ் செய்திகள்
தனுஷின் ’கர்ணன்’ படத்தைப் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஏப்ரல் 9ஆம் தேதி வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்தப் படத்தை பார்த்து நடிகர் ரஜினி பாராட்டியுள்ளதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
கர்ணன் படம் குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற தயாரிப்பாளர் தாணு, கர்ணன் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சிறப்பு காட்சியாக திரையிட்டு காண்பித்தோம். படம் பார்த்த பிறகு ரஜினி படக்குழுவினரையும் படத்தில் நடித்த அனைவரையும் வெகுவாகப் பாராட்டியதாக தெரவித்தார்.