தமிழ்நாடு

tamil nadu

'அண்ணாத்த’ ஆடுறார் ஒத்திக்கோ  - தலைவர் 168 டைட்டில் வெளியானது

By

Published : Feb 24, 2020, 7:34 PM IST

இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் ரஜினி நடித்துவரும் 'தலைவர் 168' திரைப்படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.

rajini new movie with siruthai siva titled as annaatthe
rajini new movie with siruthai siva titled as annaatthe

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 'தர்பார்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சிறுத்தை சிவாவுடன் தனது 168ஆவது படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் ரஜினி.

'தலைவர் 168' என்று அழைக்கப்பட்ட இத்திரைப்படத்தின் டைட்டிலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில் படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் ரஜினிக்கு முதல்முறையாக டி. இமான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, சத்தீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வரும் தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்கும் ரஜினி

ABOUT THE AUTHOR

...view details