தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மேற்கு விர்ஜினியாவில் சூப்பர் ஸ்டார் - வைரலாகும் புகைப்படங்கள்! - annathe

அமெரிக்காவில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி, அவரது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Rajinikanth pic in USA goes viral
Rajinikanth pic in USA goes viral

By

Published : Jun 30, 2021, 3:23 PM IST

2016ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் ரஜினிகாந்த். அதன்பிறகு உடல்நலப் பரிசோதனைக்காக அவர் அவ்வப்போது அமெரிக்கா செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த மாதம் (ஜூன் 19) அதேபோல் வழக்கமான பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த். அங்குள்ள மாயோ கிளினிக் அருகே அவர் நடந்துவரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. ரஜினியின் அமெரிக்க பயணம் குறித்து நடிகை கஸ்தூரி சர்ச்சையை கிளப்பி வந்தார்.

kasturi tweet

பின்னர், அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி! நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி- நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புது பொலிவுடன் 'தலைவரை' வரவேற்க தயாராகட்டும் தமிழகம் என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தற்போது ரஜினி அமெரிக்காவில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மேற்கு விர்ஜினியாவில் அவர் தனது ரசிகர்கள் சிலரை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அந்த புகைப்படங்கள்தான் இணையத்தில் உலா வரத் தொடங்கியுள்ளன.

Rajinikanth pic in USA goes viral

இதையும் படிங்க:ஓடிடியில் வெளியாகிறதா 'சார்பட்டா' திரைப்படம்?

ABOUT THE AUTHOR

...view details