தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் ஒளிபரப்பான ரஜினியின் கிளாசிக் படங்கள் - அசத்தும் ரசிகர்கள்! - latest kollywood news

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கிளாசிக் ஹிட் படங்கள் திரையரங்கத்தில் ஒளிபரப்பப்பட்டது.

ரஜினி
ரஜினி

By

Published : Dec 13, 2020, 11:25 AM IST

நடிகர் ரஜினிகாந்த் நேற்று (டிச. 12) தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தனர். ஒருசில ரசிகர்கள் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு குவிந்து வாழ்த்து சொல்ல காத்திருந்தனர்.

இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளையொட்டி பிவீஆர் சினிமாஸ் சார்பில் சிறப்பான காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ரஜினி நடித்த கிளாசிக் ஹிட் படங்களை, நேற்று முதல் மூன்று நாள்களுக்கு ஒளிபரப்பும் வகையில் ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்து அசத்தியுள்ளனர்.

ரஜினி

ரஜினியின் சிவாஜி, 2.0, நினைத்தாலே இனிக்கும், தர்பார் உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details