தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரஜினி - கமல், அஜித் - விஜய்! டாப் இந்தியர்கள் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த 10 தமிழ் பிரபலங்கள் - ஃபோர்ப்ஸ் பட்டியலில் தல அஜித்

வழக்கமாக பாலிவுட் பிரபலங்கள் ஆக்கிரமிக்கும் இந்தியாவின் டாப் 100 பிரபலங்களின் இந்த ஆண்டு பட்டியலில் தமிழ் பிரபலங்கள் பலர் இடம்பிடித்துள்ளனர்.

Tamil celebs in Forbes 2019 celebrity 100 list
Forbes 2019 celebrity 100 list

By

Published : Dec 19, 2019, 3:50 PM IST

Updated : Dec 20, 2019, 6:26 PM IST

நியூயார்க்: ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் தமிழ்ப் பிரபலங்கள் 10 பேர் இடம்பிடித்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் டாப் பிரபலங்களின் பட்டியல்களைப் பல்வேறு பிரிவுகளில் வெளியிட்டுவருகிறது. அந்த வகையில் இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பிரபலங்கள் இடம்பிடித்துள்ளனர். இந்தப் பட்டியலில் திரை பிரபலங்களை ஒதுக்கி தள்ளிவிட்டு முதல் முறையாக கிரிக்கெட் வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான விராட் கோலி முதல் இடத்தைப் பிடித்துள்ளனர். இவருக்கு அடுத்தபடியா அக்‌ஷய் குமார், சல்மான் கான், அமிதாப் பச்சன், மகேந்திர சிங் தோனி என முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம்வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 13ஆவது இடத்தையும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் 16ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக தளபதி விஜய் 47, தல அஜித் 52, பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் 55, உலகநாயகன் கமல்ஹாசன் 56, நடிகர் தனுஷ் 64, இயக்குநர் சிறுத்தை சிவா 80, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் 84, தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட கிரிக்கெட் வீரர் மித்தாலி ராஜ் 88 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளனர்.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் 27ஆவது இடத்திலும் மெகா ஸ்டார் மம்முட்டி 62ஆவது இடத்திலும் உள்ளனர்.

இதேபோல் தெலுங்கு சினிமா நடிகர்களான பிரபாஸ் 44, மகேஷ்பாபு 54, இயக்குநர் திரிவிக்ரம் சீனிவாஸ் 77 ஆகிய இடங்களில் இருக்கின்றனர்.

மேலும், கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, சாய்னா நேவால், ரோஹன் போபண்ணா, தீபிகா படுகோனே, ஷில்பா ஷெட்டி குந்த்ரா உள்ளிட்ட தென்னிந்திய பிரபலங்கள் பலரும் இடம்பிடித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுவரும் இந்தப் பட்டியலில் பாலிவுட், வட இந்திய பிரபலங்கள் பெயர்களே அதிகம் இடம்பிடித்து வந்த நிலையில், இந்த ஆண்டில் அதிகம் தென்னிந்திய பிரபலங்களும் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலங்கள் அதிகம் பேர் இடம்பிடித்துள்ளனர்.

Last Updated : Dec 20, 2019, 6:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details