'தர்பார்' படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'அண்ணாத்த'. சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா ஆகியப் பகுதிகளில் நடந்துமுடிந்த நிலையில், போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.