தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கஜா புயலில் பாதிப்படைந்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த ரஜினி! - கஜா புயலில் பாதிப்படைந்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த ரஜினி

கஜா புயல் பாதிப்பால் வீட்டை இழந்த 10 குடும்பங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.

Rajini helps gaja cyclone victims

By

Published : Oct 21, 2019, 12:51 PM IST

நாகை மாவட்ட மக்கள் கஜா புயலின் கோர தாண்டவத்தால் தங்கள் உடைமைகளை இழந்து தவித்தனர். அவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், திரைப்பிரபலங்களும் உதவிக்கரம் நீட்டினர். அந்த வகையில் ரஜினிகாந்த், வீட்டை இழந்த 10 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. அப்போது மிகவும் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என ரஜினி அறிவித்திருந்தார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த ரஜினி

அதன்படி வீடு கட்டும் பணிகள் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது அந்தப் பணிகள் நிறைவடைந்து வீடுகள் தயார் நிலையில் உள்ளன. எனவே அந்த 10 குடும்பங்களையும் தனது போயஸ் தோட்ட இல்லத்துக்கு அழைத்து அவர்களிடம் வீட்டுச் சாவியை ரஜினி ஒப்படைத்தார்.

இதையும் படிங்க: புத்தகம் குறித்து விளக்கம் கேட்கும் ரஜினி: வைரலான வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details