ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கிய ரஜினிகாந்த்! - ஃபெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி

12:33 March 24
கரோனா அச்சம் தொடர்பாகப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தொற்றால் பல துறைகள் நஷ்டமடைந்துள்ளன. இதனால் தினக்கூலியாக இருக்கும் திரைப்பட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் வறுமையில் தவித்து வருகின்றன. இந்நிலையில் அவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் உதவ முன்வர வேண்டும் என்று, ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர். கே. செல்வமணி கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் அந்த கோரிக்கை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இவரைத் தவிர சிவகார்த்திகேயன், சூர்யா - கார்த்தி ஆகியோர் தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கெட்ட பய சார் அவன் - மறக்க முடியாத இயக்குநர் மகேந்திரன் கையெழுத்து!