கடந்த 2004ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு தாங்கள் இருவரும் பிரிந்து அவரவர் பாதையில் தனித்தனியே செல்ல இருப்பதாக தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர்.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பலரும், இத்தம்பதிக்கு பாசிட்டிவ், நெகடிவ் கமெண்டுகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதனால் பல்வேறு தரப்பினரின் கவனமும் தற்போது ரஜினிகாந்தின் மீது திரும்பியுள்ளது.