தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 3, 2020, 4:05 PM IST

Updated : Dec 3, 2020, 4:39 PM IST

ETV Bharat / sitara

சிங்கம் களமிறங்கிடுச்சு: ஆறிலிருந்து அறுபது வரை காத்திருந்த ரசிகர்கள்!

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அவரது ரசிகர்கள் சிலர் என்ன மாதிரியான பார்வையை வைத்திருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்...

Rajini entry in politics
Rajini entry in politics

கஜினி சூர்யா ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால், ரஜினி வெறியர்களுக்கும், ரசிகர்களுக்கும் நூல் அளவு வித்தியாசமே உள்ளது. ரஜினி பட ரிலீஸின் போது 60 அடிக்கு ஃப்ளக்‌ஸ் வைத்து, அதற்கு பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்பவர்கள் வெறியர்கள். தலைவர் படம் ஃபர்ஸ்ட் டே.. ஃபர்ஸ்ட் ஷோ என சமூக வலைதளங்களில் படத்துக்கு எடுத்த டிக்கெட்டை போட்டோ எடுத்து போஸ்ட் போட்டுவிட்டு, படம் மொக்கையாக இருந்தாலும் தலைவர் மாஸ் என மனசாட்சிக்கு விரோதமாக வாசலில் நிற்கும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிப்பவர்கள் ரசிகர்கள்.

ரஜினி அரசியலுக்கு வருவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாவது இந்த இருதரப்பு மக்களால்தான். இவர்களை தவிர்த்து ரஜினியை அமைதியாக ஆதரிக்கும் ரா ஏஜென்ட்களும் இருக்கிறார்கள்.

2021 ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவது என ரஜினி முடிவெடுத்திருக்கிறார்... மகிழ்ச்சி. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம், ஒரு பெருங்கூட்டத்துக்கு தலைவனாக விரும்பலாம், மறுப்பதற்கில்லை. ரஜினி என்றால் ஏன் இத்தனை எதிர்ப்பு கிளம்புகிறது என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது. இதையே தமிழ்நாடு ஊடகங்கள் பலவும் விவாதப் பொருளாக மாற்றுகின்றன.

ரஜினிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரு கூட்டம், கடந்த காலங்களில் மக்கள் நலன் சார்ந்து இந்த மண்ணில் கத்திக் கொண்டிருந்த கூட்டத்தை மறந்துவிட்டது இங்கு ஒரு பெரும் பிரச்னை. இதை தெளிவாக கவனித்த மக்கள்தான் ரஜினியின் அரசியல் வருகையை தீவிரமாக எதிர்க்கிறார்கள். நீ இன்னும் 100 படத்துல நடி தலைவா, முதல் நாள் முதல் ஷோவுக்கு நான் வாரேன் என, ஆனால் ஓட்டு கேட்டு எங்ககிட்ட வராதே என்கிறது அம்மக்களின் குரல்.

வா தலைவா வா... தலைமை ஏற்க வா என ஆறிலிருந்து கத்திக் கொண்டிருந்த ரசிகர் கூட்டம் இப்போது அறுபதை நெருங்கிவிட்ட வேளையில், உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன் என ரஜினி அரசியல் கட்சி தொடங்கும் முடிவை எடுத்திருக்கிறார். ரஜினி அரசியலில் சிக்கி சீரழியப்போகிறாரா? அல்லது சிறப்பான தமிழகத்தை உருவாக்கும் தலைவனாக உருவெடுக்கப் போகிறாரா? என்பதை அவர் ஸ்டைலிலேயே சொல்ல வேண்டுமானால், எல்லாத்தையும் மேல இருக்கறவன் பார்த்துக்குவான்....

Rajini entry in politics

ஒரு ரஜினி ரசிகனாக அவருக்கு ஒரு வேண்டுகோள்... தர்பார் பட ரிலீஸின்போது பிரபல ஆங்கில பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளியானது. The only superstar available in the universe என்பது அதன் தலைப்பு. அமிதாப் பச்சன், அர்னால்டு, ஜாக்கி சான், டாம் க்ரூஸ் என உலகின் முக்கிய சூப்பர் ஸ்டார்கள் காலாவதியான பின்பும் கதாநாயகனாக மட்டுமே வலம்வரும் ஒரே நடிகர் ரஜினிதான் என்கிறது அக்கட்டுரை. இது மறுக்க முடியாத உண்மையும் கூட... அண்ணாத்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறோம்...

இதையும் படிங்க: #Rajinism: உங்களுக்கு வயசே ஆகல! What a man!

Last Updated : Dec 3, 2020, 4:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details