தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாரதிராஜாவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி! - Rajini congratulates Bharathi raja

ராக்கி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பை வெளிப்படுத்தியிருந்த இயக்குநர் பாரதிராஜா, வசந்த்ரவி ஆகியோரை ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

பாரதிராஜாவை நேரில் அழைத்துப் பாராட்டிய ரஜினி!
பாரதிராஜாவை நேரில் அழைத்துப் பாராட்டிய ரஜினி!

By

Published : Dec 25, 2021, 8:20 PM IST

'தரமணி' நடிகர் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி உள்ளிட்டோர் நடித்த 'ராக்கி' படம் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியானது. இதனை 'சாணிக்காயிதம்' படத்தை இயக்கும் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

இவர் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி தேசிய விருதை வென்ற 'ஆரண்ய காண்டம்' படத்தில் உதவி இயக்குநராகவும், 'இறுதிச்சுற்று' படத்தில் டயலாக் போர்ஷனை எழுதியும் பணியாற்றியுள்ளார்.

'ராக்கி' திரைப்படத்தை 'ரெளடி பிக்சர்ஸ்' சார்பாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோர் தயாரித்துள்ளனர். வெளியான நாள் முதலே இத்திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. ரத்தம் தெறிக்கத் தெறிக்க நகரும் காட்சிகளில் பழிவாங்கலில் தனி ருசி கண்ட மணிமாறன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பாரதிராஜா.

"குழந்தை மூஞ்சிடா இது" என திரைப்படத்தில் அறிமுகமாகும் வசந்த்ரவி ஆக்ரோஷமான நடிப்பில் கால்தடம் பதித்துள்ளார். சமீபத்தில் படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் பாசிட்டிவ் கமெண்ட்களை அள்ளித் தெளித்து வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் 'ராக்கி' படத்தில் வசந்த் ரவி, இயக்குநர் பாரதிராஜா ஆகியோரின் நடிப்பைக் கண்டு மிரண்டு போயிருக்கிறார் ரஜினிகாந்த். இதனையடுத்து உடனடியாக இருவரையும் நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார் ரஜினி. தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வலம் வருகிறது.

இதையும் படிங்க:மீண்டும் படத்தில் நடிக்கிறாரா விஜயகாந்த்? - பிரேமலதா விளக்கம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details