சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. கரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது.
அப்போது படக்குழுவினர் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினிக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினி, வீட்டில் ஒய்வெடுத்து வந்தார். 'அண்ணாத்த' படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.