இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் தர்பார். இப்படத்தில், நயன்தாரா, யோகி பாபு, மற்றும் பலரும் நடித்துவருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த 9ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
ரஜினியின் 'தர்பார்' மாஸான டபுள் அப்டேட் - நயன்தாரா, யோகி பாபு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படத்தின் புதிய அப்டேட் செய்திகள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
மேலும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. தர்பார் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மே 29ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் பேட்ட படத்தில் முதல் பாடல் பாடியது போன்று இப்படத்திலும் ரஜினியின் இன்ட்ரோ பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளாராம்.
மேலும், இப்படத்தில் ரஜினி இரண்டு வேடத்தில் நடிப்பதாகவும் அதில் ஒன்று போலீஸ் வேடம் என்கின்றனர். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக வரும் ரஜினி சிறப்பாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக 'தர்பார்' படத்தில் ரஜினி, நயன்தாரா படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.