சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. கரோனா தொற்றின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு பணிகள் 2020ஆம் ஆண்டு டிசம்பரில் மீண்டும் தொடங்கப்பட்டது. மேலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. தற்போது அவர் முழு ஓய்வில் இருக்கிறார்.
இதனையடுத்து அண்ணாத்த திரைப்படம் வெளியாகுமா ஆகாதா என்ற நிலையில் திடீரென இந்த ஆண்டு தீபாவளியன்று படம் வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தற்போது மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.