'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்கள்', 'ஜானி' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் அழுத்தமான தடம் பதித்தவர் இயக்குநர் மகேந்திரன். உடல்நலக்குறைவால் மார்ச்26ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகும் இரங்கல் தெரிவித்துவருகிறது. மேலும், பள்ளிக்கரணையில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.