ரஜினியின் 168ஆவது படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார். முன்னதாக 'எந்திரன்', 'பேட்ட' படத்தினை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், தற்போது ரஜினியின் மூன்றாவது படத்தினை தயாரிக்கவுள்ளது.
ரஜினி பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து! - ரஜினிகாந்தின் 168ஆவது படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 12 தொடக்கம்
ரஜினி-சிறுத்தை சிவா இணையும் படத்தின் படப்பிடிப்பு ரஜினியின் பிறந்தநாளன்று தொடங்கவுள்ளது.
![ரஜினி பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4734507-thumbnail-3x2-siruthai.jpg)
இயக்குநர் சிவா கார்த்தியை வைத்து 'சிறுத்தை' படத்தினை இயக்கினார். அதனையடுத்து 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்' என அடுத்தடுத்து அஜித்தை வைத்து இயக்கினார். தற்போது ரஜினியின் 168ஆவது படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கவிருக்கும் பிற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதியன்று படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்று அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பாயும்புலியின் அடுத்த படத்தை இயக்கும் சிறுத்தை சிவா