இயக்குநர் சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், சரயூ மோகன், நந்தனா வர்மா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்துள்ள படம் 'ராஜாவுக்கு செக்'. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் முடிந்து திரைக்கு வர தயராக உள்ளது.
சேரனின் ரெக்கார்டை உடைச்ச 'ராஜாவுக்கு செக்' - இயக்குநர் சேரன்
இயக்குநர் சேரன் நடித்துவரும் 'ராஜாவுக்கு செக்' படத்திற்கு தணிக்கைக் குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
File pic
இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கைக் குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது குறித்து நடிகர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ராஜாவுக்கு செக்' தணிக்கை முடிந்து 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. இயக்குநர் ராஜ்குமார் என்னிடம் இதை தெரிவிக்கும்போது உங்க படங்கள் எல்லாமே 'யு' சான்றிதழ்தான். முதல் முறையாக நாங்க அந்த ரெக்கார்டை உடைச்சுருக்கோம்னு சொன்னார் என்று பதிவிட்டுள்ளார்.