நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக, அவரின் உறவினர் ராஜசேகர் கற்பூரபாண்டியன் பணியாற்றி வருகிறார்.
இவர்தான் சூர்யாவின் ட்விட்டர் கணக்கையும் கவனித்து வருகிறார். சூர்யா பெயரில் வரும் அனைத்து பதிவுகளும் இவர் தான் வெளியிட்டுவருகிறார்.
தலைமை செயல் அலுவலர் ராஜசேகர் ட்விட்டரிலிருந்து விலகல் இந்நிலையில் சூர்யாவின் ட்விட்டர் பக்கத்தில் இவர் தேவையில்லாமல் மற்ற படங்களுக்கு விளம்பரம் செய்துவருவதாக, அவரது ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதனால், பிற ரசிகர்கள் மத்தியில் சூர்யாவின் மதிப்பு குறைவதாகச் சொல்கின்றனர்.
மேலும் ராஜசேகரைத் திட்டி ஏராளமான போஸ்ட்களைப் பதிவிட்டு வந்தனர். இதனால் கடுப்பான அவர் ட்விட்டரில் இருந்தே வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'விக்ரமாதித்யா யார்?' கேள்வியுடன் வெளியாகும் பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' டீசர்!