'பாகுபலி' இயக்குநரான ராஜமௌலி தற்போது 'ஆர்ஆர்ஆர்' என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படம் 1920ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய இரண்டு புரட்சியாளர்களான அல்லூரி சீத்தாராம ராஜூ, கொமாரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படுகிறது. தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்களான ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் படத்தின் நாயகர்களாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த படத்தை ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ள இந்தபடத்திற்கு கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் இந்த படம் உருவாகிறது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முக்கால்வாசி நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் முக்கிய கதாபாத்திரம் மற்றும் வில்லன் குறித்த தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹாலிவுட் நடிகை ஒலிவியா மோரிஸ் ஜெனிஃபர் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதேபோல் படத்தில் வில்லனாக நடிகர்கள் ரே ஸ்டீவென்சன், அலிசன் டூடி ஆகியோர் நடிக்கின்றனர். இதில் ரே ஸ்டீவென்சன் ஸ்காட் கதாபாத்திரத்திலும் அலிசன் டூடி லேடி ஸ்காட் என்னும் கதாபாத்திரலும் நடிக்கின்றர்.
மேலும் இந்தப் படத்தில் பாலிவுட் நட்சத்திரங்களான அஜய் தேவ்கன், அலியா பட் ஆகியோரும் நடித்து வருகின்றனர். தமிழ் நடிகரான சமுத்திரக்கனியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 300 கோடி செலவில் தயாராகும் 'ஆர்ஆர்ஆர்' படமானது 2020ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.