’பாகுபலி 2' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிவரும் படம் ’RRR’. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், அலியா பட் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் உகாதி பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் அனல் பறக்கும் நெருப்பு, நீர் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மேலும் தற்காலிகமாக 'ஆர்.ஆர்.ஆர்' என்ற அழைக்கப்பட்ட இப்படத்திற்கு, 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' என்று தலைப்பிட்டுள்ளதாக மோஷன் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் பிரமாண்டமாக வெளியாகியுள்ள மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிவரும் இப்படம் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க:’ரிஸ்க் எடுக்காதீர்கள்’- கரோனா வைரஸ் குறித்து ரசிகர்களுக்கு மதுமிதா அறிவுரை