தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பவன் கல்யாணை வைத்து படம் இயக்கும் எண்ணம் இருந்தது - இயக்குநர் ராஜமெளலி

ஆரம்ப காலங்களில், பவன் கல்யாணுக்கு ஒரு கதையை உருவாக்க முடிந்த அனைத்தையும் முயற்சித்தேன். அவரை வைத்து படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது என இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

v
v

By

Published : Nov 1, 2021, 9:07 PM IST

நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'. ராஜமௌலி இயக்கும் இதில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆர்ஆர்ஆர் க்ளிம்ஸ் வீடியோ இன்று (நவம்பர் 1) வெளியானது. 46 நொடிகள் ஒடும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மேலும் திரைபிரபலங்கள் பலர் இந்த வீடியோவை வெகுவாக பாராட்டி ட்வீட் செய்து வருகின்றனர். 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

அடுத்தாண்டு ஜனவரி 7ஆம் தேதி 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் திரையரங்கில் வெளியாகிறது. தற்போது இதை விளம்பரப்படுத்தும் முயற்சியில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.

சமீபத்தில் இயக்குநர் ராஜமெளலி ஊடகம் ஒன்றில் நேர்காணலில் கலந்து்கொண்டார். அப்போது பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கு படம் பண்ணாதது ஏன் என கேள்வியெழுப்பட்டது.

அதற்கு ராஜமெளலி கூறியதாவது, " நான் பவன் கல்யாணை மிகவும் நேசிக்கிறேன். நான் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலங்களில், பவன் கல்யாணுக்கு ஒரு கதையை உருவாக்க என்னால் முடிந்த அனைத்தையும் முயற்சித்தேன்.

அவரை வைத்து படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்தது. அதற்காக நான் அவரை நேரில் சந்தித்து கதை குறித்து விவாதமும் செய்தேன். பின்னர் நான் ஆக்சன் கமர்சியல் படங்களை இயக்க ஆரம்பித்தேன்.

பவன்கல்யாணும் அரசியலில் பிஸியாகிவிட்டார். எனவே எங்கள் இருவரின் பாதைகளும் பிரிந்தன" என்றார்.

'ஆர்ஆர்ஆர்' படத்தின் தமிழ்நாடு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. அதே போல் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் டிஜிட்டல் தளத்தின் உரிமையை ஜீ5 நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும் தமிழ்த் தொலைக்காட்சியில் விஜய் டி.வி 'ஆர்ஆர்ஆர்' படம் ஒளிபரப்பு செய்யும் உரிமையை கைப்பற்றியுள்ளது.

'ஆர்ஆர்ஆர்'படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஆங்கிலம், போர்த்துகீசியா, கொரியா, துருக்கி, ஸ்பானிஷ் என உலக மொழிகளிலும் வெளியாகிறது.

இதையும் படிங்க: ஆர்ஆர்ஆர் திரைப்பட ரிலீஸ் தேதி

ABOUT THE AUTHOR

...view details