தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'த்ரிஷ்யம் 2' உலகத் தரம்... ஜீத்து ஜோசப்பை பாராட்டிய ராஜமெளலி! - த்ரிஷ்யம் திரைப்படம் பார்த்த ராஜமொளலி

மோகன்லாலின் 'த்ரிஷ்யம் 2' படத்தை பார்த்து அப்படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப்பை, இயக்குநர் ராஜமெளலி வெகுவாக பாராட்டியுள்ளார்.

drishyam
drishyam

By

Published : Mar 15, 2021, 7:42 PM IST

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் நேரடியாக ஓடிடியில் வெளியானப்படம் த்ரிஷ்யம் 2. மோகன்லாலுடன் மீனா, எஸ்தர், முரளி கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பிப்ரவரி 19ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி த்ரிஷ்யம் 2 படத்துக்கு பாராட்டு தெரிவித்து ஜீத்து ஜோசப்பிற்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதனை ஸ்கீரின் ஷாட் எடுத்து ஜீத்து ஜோசப் தனது ஃபேஸ்புக்கில் பகிரிந்துள்ளார். அந்த குறுந்தகவலில் ராஜமெளலி கூறியிருப்பதாவது, "வணக்கம் ஜீத்து, நான் ராஜமெளலி, இயக்குநர், சில நாட்களுக்கு முன்பு த்ரிஷ்யம் 2 பார்த்தேன். அது என் சிந்தனையில் ஓடிக்கொண்டே இருந்ததால், மீண்டும் சென்று முதல் பாகத்தைத் பார்தேன். (நான் தெலுங்கில் வெளியான த்ரிஷயம் மட்டும் முன்பு ஒரு முறை பார்த்திருந்தேன்)

ஜீத்து ஜோசப்பை பாராட்டிய ராஜமெளலி

இயக்கம், திரைக்கதை, படத்தொகுப்பு, நடிப்பு என ஒவ்வொரு விஷயமும் அற்புதமாக இருந்தது. மேலும், இந்தக் கதை எழுதப்பட்ட விதம் வேறொரு தளத்தில் இருக்கிறது, உலகத் தரத்தில் இருக்கிறது. முதல் பாகமே தலைசிறந்த படைப்புதான். இரண்டாம் பாகம் என்று ஒன்றை யோசித்து, அது முதல் பாகத்தோடு எந்தச் சிக்கலுமில்லாமல் பொருந்திப் போவது, அதே அளவு பரபரப்போடு, ரசிகர்களைக் கட்டிப்போடும் வகையில், அதைச் சொன்னது எல்லாம் அசாதாரணமான விஷயம். உங்களிடமிருந்து இன்னும் பல தலைச்சிறந்த படைப்புகளை எதிர்நோக்கியுள்ளேன்" என்று அதில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க:தெலுங்கு ரீமேக்: 'த்ரிஷ்யம் 2' படப்பிடிப்பு தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details