இணையத்தொடர் எடுப்பதாக கூறி இளம் பெண்கள், மாடல்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்து இதற்காகத் தனியாக செல்போன் செயலி தயாரித்து பதிவேற்றம் செய்தாக எழுந்த புகாரின் அடிப்படையில், தொழில் அதிபரும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவை மும்பை காவல் துறையினர் கைது செய்தனர்.
ராஜ் குந்த்ரா எடுத்திருக்கும் படங்கள் பாலுணர்வைத் தூண்டும் ஆபாசப் படங்கள் அல்ல, அவை பாலுணர்வைச் சொல்லும் கலையம்சம் கொண்டவை என்று கூறி நீதிமன்றத்தில் ராஜ் குந்த்ரா தரப்பு பிணை கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய நபராக கருதப்படும் நடிகை ஷெர்லின் சோப்ரா கூறுகையில், "ராஜ் குந்த்ரா திரைப்படம் தயாரிப்பதற்காக தன்னைத் தொடர்பு கொண்டார். இதற்காக நானும் இந்தாண்டு மார்ச் மாதம் அதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டேன்.
ராஜ் குந்த்ரா அவ்வப்போது என்னிடம் படத்தில் இப்படி நடிக்க வேண்டும் எனக்கூறி கிளாமர், ஃபிட்னஸ், போன்ற வீடியோக்களை காண்பிப்பார் . ஆரம்பத்தில் இது பிடித்திருந்தது. பின் அரை நிர்வாண படங்கள் காண்பிக்க ஆரம்பித்தார்.