நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா, ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் மும்பை காவல் துறையினரால் ஜூலை 19ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா, அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய செல்போனை ஆய்வுசெய்ததில், ஆபாச படம் விற்பனை செய்ததற்கான பணப் பரிமாற்றங்களுக்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனத்துடன் இணைந்து ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ராஜ் குந்த்ரா மீது காவல் துறையினர், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420 (மோசடி), 34 (பொதுவான நோக்கம்), 292 மற்றும் 293 (ஆபாசமான மற்றும் அநாகரிகமான விளம்பரங்கள், காட்சிகள் தொடர்பானது), தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவுடன் ரியான் தோர்பே என்பவரும் கைதுசெய்யப்பட்டார். இவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள ஜூலை 23ஆம் தேதிவரை மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தற்போது இவர்களை ஜூலை 27 வரை போலீஸ் காவலில் வைத்திட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: விழிப்புடன் இருங்கள் - கணவர் கைதுக்குப்பின் ஷில்பா ஷெட்டியின் உருக்கமான பதிவு