பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். இவர் 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் முதல் பாகத்தில் துணை நடிகையாக அறிமுகம் ஆனார். அப்படத்தில் நடித்திருந்தாலும், 'பிக்பாஸ்' நிகழ்ச்சிதான் அவருக்கான அடையாளத்தை பெற்றுத்தந்தது. இதனைத்தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா தயாரித்த 'பியார் பிரேமா காதல்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இத எப்படி பண்றதுன்னு தெரியல...எனக்கு இதுல அனுபவம் இல்லை தமிழ்நாட்டை மகிழ்விக்க காத்திருக்கும் ரைசா - ரைசா வில்சன் நியூஸ்
நடிகை ரைசா நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் டேட்டிங் செய்யப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
'பியார் பிரேமா காதல்' படத்தைத் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் 'ஆலிஸ்' படத்தில் ரைசா நடித்து வருகிறார். பெண்களை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தினை மணி சந்துரு இயக்குகிறார். கிரைம் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா வில்சன் அவ்வப்போது தனது புகைப்படம் அல்லது வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நான் ஹரிஷ் கல்யாணுடன் டேட்டிங் செய்யப் போகிறேன். தமிழ்நாட்டை மகிழ்விப்பதற்காக என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து மற்றொரு ட்வீட்டில், உண்மையாக சொல்கிறேன் இதற்கு முன் இதை நான் செய்தது கிடையாது. இதை எப்படி செய்வது என்பதுகூட எனக்கு தெரியாது. இதை பற்றி எப்படி ஒருவரிடம் கேட்பது என்று கூறியுள்ளார். ரைசா ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் கவுர வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.