தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

படுத்துக்கொண்டே எடுத்த செல்ஃபி - ரைசாவுக்கு ஏற்பட்ட சோகம்! - ரைசாவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்

ஷூட்டிங் இல்லாவிட்டால் இஷ்டம்போல் போட்டோ, விடியோ என எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதில் முன்னணி வகிக்கும் மாடலும், நடிகையுமான பிக் பாஸ் புகழ் ரைசா, செல்ஃபி எடுக்கும்போது போனை தவறவிட்டதால் தனக்கு நேர்ந்த விபரீதத்தை செல்ஃபி விடியோவாகப் பதிவிட்டுள்ளார்.

Raiza injured her lips
Actress Raiza wilson

By

Published : Dec 21, 2019, 8:20 PM IST

சென்னை: படுத்துக்கொண்டே செல்ஃபி எடுத்து உதட்டில் அடி வாங்கியதை செல்ஃபி விடியோ மூலம் தெரிவித்துள்ளார் ரைசா.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பியார் பிரேமா காதல் படம் மூலம் ரசிகர்களைக் கிறங்கடித்தார் ரைசா. அவ்வப்போது விளம்பரப்படங்களிலும் தோன்றிய அவர் தற்போது எஃப்.ஐ.ஆர்., காதலிக்க யாருமில்லை, ஆலிஸ் ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் இருந்தால் செல்ஃபி மோடுக்கு மாறும் இவர், விதவிதமான புகைப்படங்கள், விடியோக்களை எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் படுக்கையறையில் படுத்தவாறே செல்ஃபி புகைப்படம் எடுத்துள்ளார் ரைசா. அப்போது அவரது கையிலிருந்த செல்போன் எதிர்பாராதவிதமாக தவறி முகத்தின் மீது விழுந்த நிலையில், உதட்டில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தச் சம்பவத்தை செல்ஃபி விடியோவாக எடுத்து, தனக்கு இப்படியொரு விபரீதம் நிகழ்ந்துள்ளது என்று வருத்தமாகக் கூறியுள்ளார்.

அத்துடன் செல்போன் விழுவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் ஆறுதலாக பதிவிட்டும் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details