இயக்குநர் ஜெ.பார்த்திபன் இயக்கத்தில் ராய் லட்சுமி - ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மிருகா'. இந்தப் படத்தை ஜாகுவார் ஸ்டுடியோ சார்பில் வினோத் ஜெயின் தயாரிக்கிறார்.
ராய் லட்சுமியின் அதிரடியான ஆக்ஷனில் வெளியான ‘மிருகா’ டீஸர் - srikhantha new movie
ஸ்ரீகாந்த் - ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள 'மிருகா' படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Mirugaa
காடுகளின் பின்னணியில் ஆக்ரோசமான புலியுடன் ராய் லட்சுமியும் ஸ்ரீகாந்தும் அதிரடியாக சண்டையிடுகின்றனர். ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனையடுத்து இப்படத்தின் டீஸரை விஜய் ஆண்டனியும் ஆர்யாவும் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். விரைவில் இப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.