தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரசிகர்களை திகிலடைய செய்த ராய் லட்சுமி..! - cindrella

நடிகை ராய் லட்சுமி நடித்துள்ள 'சிண்ட்ரெல்லா' படத்தின் மோஷன் வீடியோ ரசிகர்களை திகிலடைய வைத்துள்ளது.

சிண்ட்ரல்லா

By

Published : May 6, 2019, 6:45 PM IST

Updated : May 6, 2019, 6:57 PM IST

கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை ராய் லட்சுமி 'கற்க கசடற' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அவர் நடித்த குண்டக்க மண்டக்க, தர்மபுரி, முத்திரை, வெள்ளித்திரை ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிப் படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்தார். மேலும் நடிகர் லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படத்தின் வெற்றி, மங்காத்தா படத்தில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பை தேடி தந்தது. அப்படத்தில் அவரது நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது.

சிண்ட்ரல்லா ராய் லட்சுமி ட்விட்டர்

தற்போது, தமிழில் கவனம் செலுத்தி வரும் ராய் லட்சுமி வினோ வெங்கடேஷ் இயக்கும் 'சிண்ட்ரல்லா' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ராய்லட்சுமி நேற்று தனது 30வது பிறந்தநாளை மிகச் சிறப்பாக கொண்டாடினார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் 'சிண்ட்ரெல்லா' படத்தின் மோஷன் வீடியோவை வெளியிட்டனர். அந்த வீடியோவில் பலவிதமான புகைப்படங்கள் இடம்பெற்றன. அதில் ஒரு புகைப்படமாக 'சிண்ட்ரெல்லா' உடை அணிந்த லட்சுமியின் புகைப்படமும் இடம்பெற்றிருக்கும். பேய் படமான இதில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மோஷன் வீடியோவில் திடீரென்று ராய்லட்சுமி பேய் போன்று உருமாறி ரசிகர்களை திகிலடைய செய்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் 'உங்கள் பிறந்த நாள் அன்று எங்களுக்கு மிகப் பெரிய ஷாக் கொடுத்து உள்ளீர்கள்' என்று ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர்.

Last Updated : May 6, 2019, 6:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details