தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

உலகப்புகழ் பெற்ற திரைப்பட விழாவில் ஏ.ஆர். ரஹ்மானின் டபுள் ட்ரீட் - ஏஆர் ரஹ்மானின் 99 சாங்ஸ் திரைப்படம்

மும்பை: உலகப்புகழ் பெற்ற பூஷன் திரைப்பட விழாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார். அத்துடன் அந்த விழாவில் அவர் தயாரித்து, திரைக்கதை அமைத்துள்ள படமும் திரையிடப்படவுள்ளது.

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்

By

Published : Oct 2, 2019, 11:50 AM IST

கோலிவுட்டைச் சேர்ந்த இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான், பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் புகழ்பெற்றவராகத் திகழ்கிறார். இவர் 99 சாங்ஸ் என்ற இந்திப் படத்துக்கு இசையமைத்து தயாரித்திருப்பதுடன் திரைக்கதையும் எழுதியுள்ளார்.

இதையடுத்து, தென் கொரியாவில் அக்டோபர் 3 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் திரைப்பட விழாவில் 99 சாங்ஸ் திரையிடப்படவுள்ளது. மேலும், இந்த விழாவில் நேரடி இசை நிகழ்ச்சியையும் ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்த்தவுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

ஏராளமான திரைப்பட ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் நானும் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 99 சாங்ஸ் படத்தின் இசை மிகவும் சிறப்பானது. அதனை சிறப்பான அந்த தருணத்தில் ரசிகர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தவுள்ளேன். அத்துடன் ரசிகர்களின் கருத்துகளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

இதனிடையே அக்டோபர் 9ஆம் தேதி ஏ.ஆர். ரஹ்மானின், 99 சாங்ஸ் படம் திரையிடப்பட இருக்கிறது. அதே நாளில் அவரது நேரடி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details