சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது தமிழ்நாட்டில் எழுச்சி ஏற்பட்ட பிறகு அரசியலுக்கு வருகிறேன் அறிவித்தார். மேலும் முதலமைச்சர் பதவி மீது தனக்கு ஒருபோதும் ஆசையில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ரஜினி பேச்சு குறித்து நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கவிதை ஒன்று எழுதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், "சுவை புதிது!
பொருள் புதிது!
வளம் புதிது!
சொற் புதிது!
சோதி மிக்க நவகவிதை,
எந்நாளும் அழியாத மா கவிதை!
கவியரசன் தமிழுக்கு இல்லை என்ற வசை என்னால் கழிந்தது
என் பாட்டுக்கு ராஜா,
இது காட்டுக்கு ராஜா!
இவை அன்று பாரதியார் சொன்னது!
இன்று நம் தலைவர் சொல்லும்
அரசியல் புதிது! எண்ணங்கள் புதிது!
முதலமைச்சர் பதவி வேண்டாம் என்கிற வழி புதிது!இதைப் புரிந்து கொண்டால் நன்மை நமக்கு!தலைவரைத் திட்டுபவர்கள்கூட, தலைவரின் திட்டங்களையும், அவரது மனதையும் புரிந்துகொண்டு பாராட்டுகிறார்கள்! இதுவே முதல் வெற்றி! அப்படி தலைவரின் மனதைப் புரிந்துகொண்டு பாராட்டிய, அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றி! நம் சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினிகாந்த் அவர்களின் எண்ணங்கள் நிறைவேற, நான் வணங்கும் ராகவேந்திரா சுவாமியை வேண்டிக் கொள்கிறேன்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பிளாக் ஷீப் யூடியூப் சேனல் தயாரிக்கும் படம் பூஜையுடன் தொடக்கம்