நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் திரையுலகில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி பின்னர் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். தற்போது இவர் நடித்து, இயக்கியுள்ள 'காஞ்சனா-3' படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பாலிவுட்டில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்கிறார்.
அன்னையர் தினத்தையொட்டி சிறப்பு பாடலை வெளியிடும் ராகவா லாரன்ஸ்! - அக்ஷய் குமார்
நடிகர் ராகவா லாரன்ஸ் அன்னையர் தினத்தன்று அதனை சிறப்பிக்கும் வகையில் புதிய பாடல் ஒன்றை வெளியிட உள்ளார்.
File pic
லாரன்ஸ் நடிகராக மட்டுமல்லாது பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார். இவர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களுக்கு 'தாய் ஃபவுண்டேசன்' என்ற அமைப்பை அன்னையர் தினமான நாளை (மே 12) தொடங்க உள்ளார்.
மேலும் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விட்டு விடக்கூடாது என்பதற்காக ஒரு சிறப்பு பாடலை உருவாகியுள்ளார். அந்தப் பாடலை நாளை (மே 12) வெளியிட இருக்கிறார். இந்தப் பாடலுக்கு அவர் நடனமும் ஆட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.