ராகவா லாரன்ஸ் பாலிவுட்டில் 'லட்சுமி பாம்' படத்தை இயக்கி வருகிறார். அக்ஷய் குமார், கியார அத்வானி நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இதற்கிடையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகவா லரன்ஸுடன் இணையும் 'மான்ஸ்டர்' நாயகி? - ராகவா லாரன்ஸுடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர்
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Raghava Lawrence
பொல்லாதவன், ஜிகர்தண்டா, ஆடுகளம் போன்ற படங்களை தயாரித்த 5 ஸ்டார் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. விரைவில் படத்தின் இயக்குநர், படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழிநுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.