தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’கனவு நிச்சயமாக நிறைவேறும்’ - ரஜினி அரசியல் அறிவிப்பு குறித்து லாரன்ஸ் - ரஜினி அரசியல் வருகை

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லாரன்ஸ்
லாரன்ஸ்

By

Published : Dec 3, 2020, 1:59 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பு குறித்து வெளியிட்டுள்ளார். ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “இந்தத் தருணத்திற்காக காத்திருந்த உங்கள் ஏகப்பட்ட ரசிகர்களில் நானும் ஒருவன். உங்களது அனைத்து விருப்பங்களும் நிறைவேற நான் ராகவேந்திர சுவாமியைப் பிரார்த்திக்கிறேன்.

உங்கள் உடல்நலத்தைக்கூட கருத்தில்கொள்ளாமல், இந்தக் கடுமையான கரோனா நெருக்கடியின்போதும், ​​நீங்கள் வந்து மக்களுக்குச் சேவை செய்ய முடிவு செய்துள்ளீர்கள். உங்கள் கனவு நிச்சயமாக நிறைவேறும். நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைவா வா தலைவா” என்று உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'இனிதான் ஆரம்பம்... தலைவர் ஆட்டம் ஆரம்பம்!'

ABOUT THE AUTHOR

...view details