தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விரைவில் புதிய படங்கள் அறிவிப்பு; ராகவா லாரன்ஸ் அதிரடி! - கஞ்சனா

சென்னை: காஞ்சனா-3 படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தமிழில் ஹிட் அடித்த காஞ்சனா படத்தை இந்தியில் ரீமிக் செய்கிறார் ராகவா லாரன்ஸ். இப்படத்தில் அக்சய்குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். இதுகுறித்து ஈடிவி பாரத் செய்திக்காக ராகவா லாரன்ஸ் அளித்த பிரத்யேக பேட்டி அளித்தார்.

File pic

By

Published : May 13, 2019, 1:14 PM IST

Updated : May 13, 2019, 4:50 PM IST

இந்தியில் பணியாற்றுவது குறித்து?

இந்தியில் பணியற்றுவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு. இந்தி திரை உலகிற்கு சென்று நான் படம் இயக்குவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. என் அம்மாவின் ஆசிர்வாதம் மற்றும் ராகவேந்திரா சுவாமியின் ஆசிர்வாதம்தான் இதற்கு காரணம். மிகவும் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.

நடிகர் அக்சய்குமாருடன் பணியாற்றுவது குறித்து?

மிகப் பெரிய நடிகரை வைத்து இயக்குகிறோம் என்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் இந்தியில் இயக்கும் முதல் படம். ஏற்கனவே எடுத்த கதை என்பதால் இயக்குவதில் எந்த ஒரு கஷ்டமும் இல்லை. மிகவும் ரிலாக்ஸாக பணியாற்றகிறேன். இந்தியில் எடுக்கும் காஞ்சனா கதைக்கு அதிகம் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னை இந்தியில் படம் இயக்க கடவுள் எனக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அதற்கு நூறு சதவீதம் உழைப்பேன்.

ராகாவா லாரன்ஸ் சிறப்பு பேட்டி

உங்கள் படத்தில் அமிதாப் பச்சன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதைப் பற்றி?

எனக்கு மிகவும் ஆசை காஞ்சனா படத்தில் சரத்குமார் நடித்த கதாபாத்திரத்தை அமிதாப்பச்சன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவேன்.

இந்தியில் படம் இயக்க தொடங்கியதால் இனி தமிழில் படம் எடுப்பீர்களா?

நான் இந்திக்கு செல்லவில்லை. இந்த ஒரு படம் மட்டும் இயக்கலாம் என்று தான் சென்றேன். நான் மறுபடியும் தமிழில் மூன்று புதிய படங்கள் குறித்து அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளேன்.

நடன இயக்குநர் பணியை கைவிட்டு முழுநேர இயக்குநராகவே மாறி விட்டீர்களா?

தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியின் புதிய படத்தில் ஒரு பாடலுக்கு பணியாற்றி உள்ளேன். கண்டிப்பாக என்னை அழைத்தால் நிச்சயமாக படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிவேன். எனது திரைப்பயணம் ஒரு நடன இயக்குனராக தான் துவங்கியது.

Last Updated : May 13, 2019, 4:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details