அந்த அறிக்கையில்,' 'தர்பார்' இசை வெளியீட்டுக்குப் பிறகு என்னை பல ஊடக நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி கேட்கின்றனர். தற்போது நான் 'இந்தி' படப்பிடிப்பில் சற்று பிஸியாக இருப்பதால், தற்சமயம் என்னால் பேட்டி எதுவும் கொடுக்க இயலாது. ஆனால், எனது படப்பிடிப்பு முடிந்ததும் நான் வந்து அனைவருக்கும் தனித்தனியாகப் பேட்டி கொடுப்பேன்.
நீங்கள் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும், பொதுவான சில விஷயங்களை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் பதிவிடும் ட்விட்டுகள், நான் பேசிய பேச்சு, இனிமேல் பேசப்போகும் விஷயங்கள் அனைத்தும் எனது சொந்த கருத்துகள் மட்டுமே. என்னுடைய கருத்துகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் எந்த வகையிலும் பொறுப்பல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
ரஜினி சொல்லி தான், நான் பேசுவதாக சிலர் கூறுவது உண்மையற்றது. ஒருவரைத் தூண்டிவிட்டு பேச வைக்கக்கூடிய நபர் அல்ல அவர். என்னால் அவருக்கு எந்தப் பாதிப்பும் வேண்டாம். நான் அவருடைய ரசிகனாக அவரிடம் எதிர்பார்ப்பது அவருடைய ஆசீர்வாதமும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது மட்டுமே.
நான் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல. நான் எனது சேவையைச் செய்கிறேன். தேவைப்படும் போதெல்லாம் எனது குழந்தைகளுக்கான உதவி கேட்பேன். உதவி செய்தால் எனது நன்றியைத் தெரிவிப்பேன். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது நான் தேவையின்றி ஒரு பிரச்னையில் இழுத்துச் செல்லப்பட்டேன்.